தமிழ்நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுகவின் ஆர்ப்பாட்டத்தையும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையும் கோயில்களில் யாகம் நடத்தி சரிகட்டிவிடலாம் என எண்ணிய முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து அனைத்து அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கும் முக்கிய கோயில்களில் யாகம் நடத்த உத்தரவிட்டனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட காமராஜர் சாலையில் உள்ள அமராவதி விநாயகர் கோயிலில் யாகம் நடத்த அதிமுகவினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் விழுப்புரம் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சி.வி. சண்முகம் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் கடைசி வரை யாகத்தில் பங்கேற்காததால் விரக்தியடைந்த ரத்தத்தின் ரத்தங்கள் பெயரளவுக்கு மட்டுமே யாகம் நடத்திவிட்டு நகர்ந்தனர்.