கந்த சஷ்டி கவசம் குறித்து, கறுப்பர் கூட்டம் யூ-ட்யூப் சேனல் வெளியிட்டிருந்த, காணொலி மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விழுப்புரத்தில் இன்று (ஜூலை 19) செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.,
'பெரியார் சிலையை அவமதிப்பவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருக்கோவிலூரில் பெரியார் சிலையை அவமதித்த நபரை, உடனடியாக தமிழ்நாடு அரசு கைது செய்துள்ளது' என்றார்.
கறுப்பர் கூட்டம் யூ-ட்யூப் சேனல், முருகக் கடவுளை அவமானப்படுத்தியதை மு.க. ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்? அதுகுறித்து வாய் திறக்காதது ஏன்? என அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கடவுள் பற்றிய கருத்தை அவரவர் நாகரிகமாக சொல்லவேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.