விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்த நிலையில் செஞ்சி காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் உள்பட மூன்று காவலர்களுக்கும், எழுத்தர் ஒருவருக்கும் இன்று (ஜூலை17) கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே செஞ்சி காவல் நிலையத்தில் இரண்டு காவலர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. அதன்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 4,538 பேருக்குக் கரோனா தொற்று உறுதி!