ETV Bharat / state

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கரோனா- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு - விழுப்புரம் மாவட்டம் செஞ்சி

விழுப்புரம்: செஞ்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
author img

By

Published : Apr 12, 2020, 10:49 AM IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அப்பகுதி அரசு அலுவலர்களால் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் 38 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று அப்பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

அதன்பிறகு பேசிய அவர், ”விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு தொடரும்பட்சத்தில் வரும் திங்கள்கிழமை(13.04.2020) முதல் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளன.

மேலும் செஞ்சி பகுதியில் உள்ள 18 வார்டுகளில் ஒரு நாளைக்கு மூன்று வார்டுகள் என்ற முறையில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பகுதியில் உள்ளவர்கள் மட்டுமே அத்தியாவசிய பொருள்கள் வாங்க அனுமதிக்கப்படுவர்.

ஞாயிற்றுக்கிழமை மட்டுமே அனைத்து பகுதியில் உள்ளவர்களும் அத்தியாவசிய பொருள்களை வாங்க அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான அனுமதி வண்ண அட்டைகள் ஒவ்வொரு பகுதிகளுக்கும் வழங்கப்பட உள்ளன. இதுதொடர்பாக ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என்றார்.

இதையும் படிங்க: "கரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அறை"- 24மணி நேர சேவை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.