விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் பகுதியில் உள்ள ஏரியைக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தூர் வாரும் பணி நடைபெறவிருந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி முதலில் தூர் வாரும் பணியைத் தொடங்கிவைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”சேலம் உருக்காலையைத் தனியாரிடம் தாரை வார்த்துக்கொடுப்பதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். சேலம் உருக்காலை, மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. 4000 ஏக்கர் விவசாய நிலங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இரும்பாலையைத் தனியாரிடம் ஒப்படைக்க முதலில் தமிழ்நாடு அரசுதான் மறுக்க வேண்டும், கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அமோக வெற்றி பெறுவார். திமுக சார்பில் நாடாளுமன்றத்திற்குச் செல்லும் உறுப்பினர்கள்தான் மக்களுக்காகக் குரல் கொடுப்பார்கள்” என்றார்.