ETV Bharat / state

ஐடி ஊழியர் டூ விவசாயி.. தஞ்சையை கலக்கும் விக்னேஸ்வரன்!

தஞ்சையைச் சேர்ந்த விக்னேஸ்வரன், ஐடி வேலையை உதறித் தள்ளிவிட்டு இயற்கை விவசாயத்தில் இறங்கி தஞ்சையை கலக்கி வருகிறார். இது குறித்த செய்தித் தொகுப்பைக் காணலாம்.

இயற்கை விவசாயி விக்னேஸ்வரன்
இயற்கை விவசாயி விக்னேஸ்வரன் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2024, 11:00 AM IST

தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோயில் காட்டுத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஸ்வரன் (37). இவர் சென்னையில் ஐடி வேலையை விட்டுவிட்டு, இயற்கை விவசாயத்தில் இறங்கி ஐடி வேலை ஊதியத்தை விட அதிக வருமானம் ஈட்டி வருவதாக கூறுகிறார்.

நமது பாரம்பரிய நெல் ரகங்களையும், இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்து அதை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறார். சென்னையில் தனியார் ஐடி துறையில் சில ஆண்டுகள் வேலை பார்த்த விக்னேஸ்வரன், கரோனோ கால கட்டத்தில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இயற்கை விவசாயி விக்னேஸ்வரன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

அப்போது, அவருக்கு இயற்கை விவசாயம் மீது ஆர்வம் எழுந்ததை அடுத்து, ரசாயன உரமின்றி இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினார். இயற்கை விவசாயம் செய்து நல்ல பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பாரம்பரிய நெல் ரகங்களான பூங்கார், மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, ஆத்தூர் கிச்சிலி சம்பா, சீரகசம் பா, காட்டுயானம், தூயமல்லி என்று அனைத்து ரகங்களையும் சாகுபடி செய்து வருகிறார்.

இதையும் படிங்க: வீடு புகுந்து சிறுவனை தாக்கிய கொடூர கும்பல்... "ஊர்ல இருக்க பயமா இருக்கு" பதறும் மக்கள்..உறுதியான நடவடிக்கை எடுக்குமா அரசு?

இது குறித்து விக்னேஸ்வரன் ஈடிவி பாரத் செய்திகளிடம் கூறும்போது, “நான் இயற்கை விவசாயம் தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது. ஐடி வேலையில் இருந்த போது கிடைத்த வருமானத்தை விட, அதிக அளவிலான வருமானம் தற்போது விவசாயத்தில் கிடைக்கிறது.

விவசாயத்தை நான் விரும்பி வேலையாக ஏற்றேன், ஒவ்வொரு நெல் ரகங்களிலும் மருத்துவ குணங்கள் உள்ளது. ஆனால் அவை நாம் செயற்கை உரம் போடுவதால், சரியான முறையில் சாகுபடி செய்யாததால் பாழாகிறது. நஞ்சில்லா உணவை சாகுபடி செய்ய வேண்டும் என நினைத்தேன். அதனால் இயற்கை விவசாயத்தை கையில் எடுத்தேன். பல்வேறு ரக நெல் மற்றும் உளுந்து பயிர்களை அரிசியாகவும், உளுந்தாகவும், அவல் மற்றும் பச்சைப் பயிராகவும் அதன் மதிப்பைக் கூட்டி விற்பனை செய்வதால் அதிக வருமானம் கிடைக்கிறது” என கூறினார்

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.