ETV Bharat / state

குடிபோதையில் இரு கிராம இளைஞர்கள் தகராறு! - latest news

விழுப்புரம்: மரக்காணம் அருகே குடிப் போதையில், இரு கிராம இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுபோதையில் இளைஞர்களுக்கு தகராறு
மதுபோதையில் இளைஞர்களுக்கு தகராறு
author img

By

Published : Jun 9, 2021, 9:58 PM IST

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள செல்லியம்மன் கோயில் நகர் இளைஞர்களும், அதே பகுதியில் உள்ள தீடீர் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும் நேற்று இரவு (ஜூன் 8) அப்பகுதியில் உள்ள தைலந்தோப்பில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
இவர்கள் மது அருந்தும் போது மது போதையில் இரு தரப்பினர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த ராம்தேவ் என்கின்ற இளைஞர் செல்லியம்மன் கோயில் வழியாக சென்றபோது அங்கிருந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில், இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுப்பட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பலத்த காயம் அடைந்த ராம்தேவ் என்பவர் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு பணிகளால் ஈர்த்த ஸ்டாலின்: தீக்குச்சியில் முதலமைச்சரின் உருவப்படம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.