ETV Bharat / state

விழுப்புரத்தில் கல்லூரி மாணவர் கொலை; பிரேதப்பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு! - Villupuram

விழுப்புரம் அருகே கல்லூரி மாணவனை அடித்து கழுத்தை நெரித்துக்கொலை செய்த மூன்று பேரை பிடித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

விழுப்புரத்தில் கல்லூரி மாணவர் கொலை
விழுப்புரத்தில் கல்லூரி மாணவர் கொலை
author img

By

Published : Jul 20, 2022, 3:19 PM IST

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே டி. எடையார் கிராமத்தைச்சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் அருண் (21). இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் படித்து வருகிறார்.

இவருடைய இருசக்கர வாகனத்தை அதே டி. எடையார் கிராமத்தைச்சார்ந்த சரத் (20) உள்ளிட்ட மூன்று பேர் திருடியுள்ளனர். இந்த மூன்று பேரும் இருசக்கர வாகனங்களைத்திருடுதல் மற்றும் கஞ்சா விற்பனை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அருண் தன்னுடைய இருசக்கர வாகனத்தின் திருட்டுத்தொடர்பாக மூன்று பேரிடமும் ரகசியமாக வாக்குமூலத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். மேலும் எனது இரு சக்கர வாகனத்தை தரவில்லை என்றால், காவல் நிலையத்தில் புகார் அளித்து தங்களுடைய வாக்குமூலத்தை கொடுத்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மூன்று பேரும் அருணை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனம் தருவதாகக்கூறி அவர்களின் கூட்டாளிகள் சிலரை வரவழைத்து மாணவன் அருணை, பலமாக தாக்கி கழுத்தை நெரித்து, கொலை செய்துள்ளனர். அவரது உடலை அருகிலுள்ள பனப்பாக்கம் ஏரியில் உள்ள கிணற்றில் வீசிவிட்டுச்சென்றுவிட்டனர்.

இதனையடுத்து அந்த மூன்று பேரில் ஒருவன் போதையில் கிராமத்தில் வந்து கொலைச்சம்பவம் பற்றி உளறியுள்ளான். இந்தத்தகவலின் பேரில் கிராம மக்கள் ஒன்று திரண்டு மூன்று பேரையும் பிடித்து திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதுதொடர்பாக இறந்த கல்லூரி மாணவன் உடலை கிணற்றிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். மேலும் 3 பேரிடமும் போலீசாரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலை வழக்கில் இவர்களுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்துக்குற்றவாளிகளையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும், கல்லூரி மாணவன் உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்றும்; மேலும் தங்களிடம் உடலைக் காண்பித்துவிட்டு தான் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக்கூறி கல்லூரி மாணவரின் உறவினர்கள் திருக்கோவிலூர் - திருவெண்ணெய்நல்லூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரத்தில் கல்லூரி மாணவர் கொலை; பிரேதப்பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு!

கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு சம்பவத்தைப் போன்று குறிப்பிட்ட சில நிமிடங்களில் மக்கள் அதிகமாக ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இளம்பெண் உயிரிழப்பு... பாஸ்தா காரணமா? - காவல்துறை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.