விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தூய்மை காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் இவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.82 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தாங்கள் பெரும் ஊதியம் தங்களது குடும்பச் செலவுக்கும், குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்கும் போதுமானதாக இல்லை என்றும் தங்களது ஊதியத்தை நாளொன்றுக்கு ரூ.250 ஆக உயர்த்தி வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், தங்களின் வாழ்வாதாரம் நிலைக்க தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரையை இன்று சந்தித்து மனு அளித்தனர். இவர்களது மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதையும் படிங்க: 'நானா 441...', ' செந்தில்பாலாஜி எனும் அமாவாசை' - விஜயபாஸ்கரின் பகீர் பதில்