ETV Bharat / state

தீபாவளி பண்டிகையில் பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம்! - தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலை பின்பற்ற வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாசுகள் வெடிப்பதற்கான வழிமுறைகளை அம்மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

viluppuram collector
viluppuram collector
author img

By

Published : Nov 13, 2020, 11:36 AM IST

விழுப்புரம்: தீபாவளி பண்டிகை திருநாளில் அதிகம் ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்த்து, பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நாளை (நவ.14) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாசு வெடிப்பதற்கான சில வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதில், "தீபாவளி பண்டிகை மற்றும் விழா காலங்களில் பட்டாசு வெடிப்பதால் எழும் ஓசை தாற்காலிக செவிட்டு தன்மையையும், தொடர் ஓசை நிலையான செவிட்டு தன்மையையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, ஒளித்திருநாளான தீபாவளி பண்டிகையில் நமது கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும், விபத்துகள் ஏற்படாமல் இருக்க அதிக சத்தமில்லாத பட்டாசுகளை தவிர்த்து விபத்தில்லா தீபாவளியை அனைவரும் கொண்டாட வேண்டும்.

உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள கால அளவுக்குள் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், புனிதத் தலங்கள் ஆகியவை அமைந்துள்ள அமைதியான பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க கூடாது மீறி வெடிப்பவர்கள் காவல் துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசைகள் மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருள்கள் இருக்கும் இடத்தில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். திறந்தவெளி மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இது எனது கடைசி தேர்தல் அல்ல... அந்தர்பல்டி அடித்த நிதிஷ்குமார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.