கள்ளக்குறிச்சி பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டு நடைபெற்றதால் கடந்த சில மாதங்களாக காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், இருசக்கர வாகனங்களை திருடும் நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் ஓரளவிற்கு கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் இருசக்கர வாகன திருட்டு சம்பவம் குறைந்தது. இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பட்டபகலில் காவல் நிலையத்திற்கு 300 மீட்டர் தூரத்தில் மதுபான கூடத்தின் வாயிலில் அங்கு பணிபுரியும் ஊழியர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார்.
அதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர் சர்வ சாதாரணமாக கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றார். இதுகுறித்து மதுபானக் கடை ஊழியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டுவரும் காவல் துறையினருக்கு இருசக்கர வாகனத்தை திருடும் சிசிடிவி காணொலி கிடைத்துள்ளது. தற்போது வாகனத்தை திருடும் நபரை பிடிக்க காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: காவல் நிலையம் அருகிலேயே மூதாட்டியிடம் நகையைப் பறித்த பலே திருடர்கள்