ETV Bharat / state

சசிகலா உட்பட 501 பேர் மீது வழக்குப்பதிவு - முன்னாள் அமைச்சர் கொடுத்தப் புகாரில் நடவடிக்கை - சசிகலா மீது வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கொடுத்தப்புகாரின்பேரில் சசிகலா உட்பட 501 பேர் மீது திண்டிவனம் அருகே ரோஷணை காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

sasikala
sasikala
author img

By

Published : Jun 30, 2021, 11:52 AM IST

Updated : Jun 30, 2021, 12:03 PM IST

விழுப்புரம்: முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி.சண்முகம் கடந்த 9ஆம் தேதி சசிகலா தூண்டுதலின்பேரில் தன்னை சிலர் தொலைபேசியில் மிரட்டுவதாக திண்டிவனம் ரோஷணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரில் சி.வி.சண்முகம் கூறியிருப்பதாவது, ' நான் கடந்த 7ஆம் தேதி வி.கே.சசிகலா குறித்து ஊடகங்களில் சில கருத்துகளை முன்வைத்தேன். அதை மனதில் வைத்துக்கொண்டு சசிகலா தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டதின்பேரில், செல்போன் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக என்னைத் தொடர்புகொண்டு 500 பேர் வரை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

அப்போது சசிகலா குறித்து எதுவும் பேசக்கூடாது எனவும், அவ்வாறு பேசினால் என்னையும் எனது குடும்பத்தையும் இல்லாமல் ஆக்கிவிடுவோம் என்றும் தெரிவிக்கின்றனர். அதன்படி சசிகலா மீதும் சசிகலா ஆதரவாளர்கள் 500 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகல்

4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு

அதன் அடிப்படையில் சசிகலா உட்பட 501 பேர் மீது, விழுப்புரம் ரோஷணை காவல் நிலையத்தில் 506(1)-கொலை மிரட்டல், 507- எங்கு இருந்து பேசுகிறோம் என்று குறிப்பிடாமல் அநாகரிகமாக பேசுதல், 109-அடுத்தவரை தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசுதல், 67 (ஐ.பி. சட்டம்) - தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் வகையிலான தகவலைப் பதிவிடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 'தொண்டர்கள் மத்தியில் சசிகலா குழப்பத்தை ஏற்படுத்துகிறார்' - திண்டுக்கல் சீனிவாசன்

Last Updated : Jun 30, 2021, 12:03 PM IST

For All Latest Updates

TAGGED:

sasikala
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.