ETV Bharat / state

"தெரு நாய்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?" - திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

தெரு நாய்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் தரப்பில் மனுத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Madurai Bench of the Madras High Court
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

மதுரை: திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கோபி ஆச்சாரியார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் உள்ளது. இந்த கோயில் உலக பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த கோயிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், இங்கு வந்து செல்லக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் கோயில் முழுவதும் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளது. கோயில் சன்னதி முன்புறம் உள்ள கொடிக்கம்பம் வரை தெரு நாய்கள் வந்து படுத்துள்ளது.

அப்படி கோயிலுக்குள் வரக்கூடிய தெரு நாய்கள் அசுத்தம் செய்வதால் ஆகம விதிப்படி அதை சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. மேலும், பக்தர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சில நாய்கள் பக்தர்களை விரட்டி கடிக்கின்றது.

எனவே கோயில் சன்னதியின் புனிதத்தை காக்கும் பொருட்டும் பக்தர்களின் பாதுகாப்பு சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் நாய்களை உள்ளே வரவிடாமல் தடுத்தும், கோயிலின் புனிததை காக்க வலியுறுத்தி மாநகராட்சி மற்றும் கோயில் உதவி ஆணையரிடம் மனு அளித்திருந்தேன் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையும் படிங்க: போதை காளான் வழக்கு; பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்யாத தடய அறிவியல் துறை.. மனுதாரருக்கு ஜாமீன்.!

ஆகவே கோயில் உள்ளே நாய்கள் வருவதை தடுத்தும் பக்தர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரிகை விடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் மரிய கிளாட் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், கோயிலில் தெரு நாய்கள் அதிக அளவில் நடமாடுவது குறித்த புகைப்படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வாதிடப்பட்டது. அதனை அடுத்து கோயில் தரப்பில், "நாய்கள் கட்டுப்படுத்துவது குறித்து மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், "கோயிலுக்குள் வரும் பக்தர்களின் பாதுகாப்பை கோயில் நிர்வாகம் தான் உறுதிப்படுத்த வேண்டும். இந்த மனு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர், கோயில் இணை ஆணையர், திருச்சி மாநகராட்சி ஆணையர் தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

மேலும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நாய்கள் கட்டுப்படுத்துவது குறித்து தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளுடன், இந்த வழக்கையும் இணைத்து பட்டியலிடவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.