சேலம் அருகே மகேந்திரபுரி பகுதியைச் சேர்ந்த பாஸ்கர்-புவனேஷ்வரி தம்பதி, காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது, இவர்கள் வந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும், காரில் இருந்து இறங்கி உயிர் தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் அரைமணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். ஆனால் கார் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. இதனால், சிறிது நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து விழுப்புரம் தாலூகா காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.