ETV Bharat / state

"தமிழர்கள்-தெலுங்கர்கள் இடையே ஒற்றுமையை குலைக்கும் நடிகை கஸ்தூரி"-தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி பேட்டி

நடிகை கஸ்தூரி பொதுமேடையில் பேசும்போது யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பேச வேண்டும் என தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி, வீரலட்சுமி, சீமான்
நடிகை கஸ்தூரி, வீரலட்சுமி, சீமான் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 4:21 PM IST

Updated : Nov 5, 2024, 6:19 PM IST

சென்னை : சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே பிராமண சமூகத்தின் மீது தொடரும் அவதூறுகளை கண்டித்து, இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி ஷங்கர் கலந்துகொண்டு பேசினார்.

தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்றைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியலை.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க.. ஜம்மு காஷ்மீர் போல தமிழ்நாட்டில் பிராமணர்கள் இனப்படுகொலை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது என்று பேசினார். இவர் பேசிய இந்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழகத்தின் பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று( நவ 5 ) சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதையும் படிங்க : “அப்போ மேல இருந்திட்டோம்; எங்கள கீழ இழுத்து அசிங்கப்படுத்தாதீங்க” - நடிகை கஸ்தூரி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் தமிழர்களுக்கும், தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கும் மோதலை உருவாக்கும் வகையிலும், இரு சமூகங்களுக்கு இடையே பிரச்னையை உருவாக்கிட வேண்டும் என்ற வகையில் நடிகை கஸ்தூரி பேசி வருகிறார்.

சண்டையை மூட்டி விட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறார். சீமானும், கஸ்தூரியும் ஒரே கருத்துக்களை கூறி வருகிறார்கள். அவர்கள் CLASSMATE-ஆ அல்லது GLASSMATE -ஆ என தெரியவில்லை.

தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இரு சமூகங்களிடையை பிரச்னையை ஏற்படுத்தும் விதத்தில் பேசி வரும் நடிகை கஸ்தூரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமேடையில் பேசும்போது யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பேச வேண்டும். தொடர்ந்து நடிகை கஸ்தூரி அருவருக்கத்தக்க வகையில் பேசி வருகிறார்.

நடிகை கஸ்தூரி தமிழரே இல்லை அவர் தமிழர்களுக்கும், தெலுங்கு மொழி பேசுபவர்களுக்கும் இடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். திரையில் கவர்ச்சியாக அரைகுறையாக நடனமாடிய கஸ்தூரி தமிழக கலச்சாரம் பற்றி பேசலாமா?. நடிகை கஸ்தூரி தெலுங்கு மொழி பேசும் வீட்டிற்கு, புகுந்த வீடாக சென்று இப்படி அவர்களை இழிவாக பேசலாமா?.

திரைத்துறையில் அல்லது அரசியலில் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இப்படி கஸ்தூரி பேசுகிறார். தன்னை தமிழச்சி என்று கூறி வரும் கஸ்தூரி, அனைத்து கோயில்களில் தமிழ் மொழியில் அர்சனை செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வாரா? கஸ்தூரியை ஆர்எஸ்எஸ் தான் இயக்குகிறது. அதன் ஆதரவில் தான் அவர் செயல்படுகிறார்.

திராவிட இயக்கத்தை எதிர்ப்பதாக இருந்தால் நேரடியாக எதிர்க்க வேண்டும். அமைதிப்படை திரைப்படம் வந்த காலத்தில் கஸ்தூரி தாயம்மா கதாபாத்திரத்தில் நடித்த போது பேசியிருந்தால் இவையெல்லாம் எடுபட்டிருக்கும். ஆனால் இப்போது கஸ்தூரி ஆயம்மாகிவிட்ட போது அவர் பேசுவதை யாரும் ஏற்க மாட்டார்கள். எனவே, தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Nov 5, 2024, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.