கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம், முனி வாழை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உறவினர்கள் 9 பேர் காரில் நிகழ்ச்சி ஒன்றிற்காக பெங்களூருக்கு சென்றனர். பின்னர், காரில் வீடு திரும்பும்போது கள்ளக்குறிச்சி கூட்டுரோடு அருகே சாலை ஓரமாக நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தியாகதுருகத்தைச் சேர்ந்த தினகரன் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் செல்வி, பச்சையம்மாள், கலைச்செல்வி, ஆகிய மூன்று பெண்கள் படுகாயம் அடைந்தனர். இரண்டு பெண் குழந்தைகள் உள்பட 5 பேர் லேசான காயங்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து சின்னசேலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பேருந்து - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!