கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவர் காரில் நேற்று திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரம் வழியாக பண்ரூட்டிக்கு வந்துக் கொண்டிருந்தார்.
![விழுப்புரம் தீப்பிடித்து எரிந்த கார் VILUPURAM CAR BURNT HIGH WAY](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4101018_vilupuram-2.bmp)
விழுப்புரம்- திருக்கோவிலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாளையம் பகுதி அருகே வந்த போது, தனபால் கரை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைப் பார்த்த அவர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் கார் முழுவதும் எரிந்து நாசமானது.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.