ETV Bharat / state

'திமுகவில் யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்கு வரலாம் என ஸ்டாலினால் கூற முடியுமா?' - திமுக தலைவர்

தி.மு.க., வில் யார் வேண்டுமானாலும் தலைவர், முதலமைச்சர் பதவிக்கு வரலாம் என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா? என அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

can-stalin-say-that-anyone-in-the-dmk-can-become-president-question-from-the-minister

author img

By

Published : Jan 19, 2021, 9:16 AM IST

விழுப்புரம் மாவட்டம் மந்தக்கரை பகுதியில் எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், “தமிழ்நாட்டில் கட்சி நடத்துபவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆட்சி கொண்டுவருவதாகவும், எதிர்க்கட்சிகள் கூட எம்.ஜி.ஆர் பெயரை கூறினால் தான் பிழைப்பு நடத்த முடியும் என்ற நிலை உள்ளது. மோடி முதல் ஸ்டாலின் வரை எம்.ஜி.ஆர்.பாடல்களை பாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுகவினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம் என கூறி மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்கள். அதுபோன்று கருணாநிதி ஆட்சியை கொண்டு வருவோம் என கூறி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினால் வாக்கு சேகரிக்க முடியுமா? தி.மு.க ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட அராஜக செயல்கள் அதிகம் நடைபெற்றன. ஆனால் அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாடு அமைதியாக உள்ளது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க., ஆட்சியில் ரவுடிசம் ஒழிக்கப்பட்டு ரவுடிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுகவினர் அனைவரும் ரவுடிகள்.

நீட் விவகாரத்தில் மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் ஸ்டாலின் அரசியல் செய்கின்றார். இந்தியாவிலேயே ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் நீட்டிற்கு சட்டம் இயற்றிய முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். தி.மு.க.,வில் யார் வேண்டுமானாலும் தலைவர், முதலமைச்சர் பதவிக்கு வரலாம் என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா?

'திமுகவில் யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்கு வரலாம் என ஸ்டாலினால் கூற முடியுமா?'

வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.,விற்கு 234 தொகுதிகளில் வேட்பாளர்கள் கிடைக்கிறார்களா என்பதே சந்தேகம். அப்படி கிடைத்தாலும் அவர்கள் ரவுடிகளாகவும், கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களாகவும் தான் இருப்பார்கள். அதனால் தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'தலைகீழாக நின்றாலும் ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது' - அமைச்சர் கே.பி. அன்பழகன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.