ETV Bharat / state

லாரி மீது பேருந்து மோதி விபத்து: மூவர் பலி - பலி

விழுப்புரம்: லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

File pic
author img

By

Published : Jun 13, 2019, 1:39 PM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே தியாகத்துருகம் புறவழிச்சாலையில் சென்னையிலிருந்து கோவையை நோக்கி தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இப்பேருந்துக்கு முன்னால் கம்பி ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.

இந்நிலையில் தனியார் சொகுசுப் பேருந்து லாரியை முந்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக லாரியின் பின் பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த சேலம் ஆத்தூரைச் சேர்ந்த வினோத், ஈரோட்டைச் சேர்ந்த முகமது ஜில்பர், அடையாள தெரியாத ஒருவர் என மூவர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

லாரி மீது பேருந்து மோதி விபத்து

மேலும் பேருந்தில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து பலியானவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro:01_13_THIYAGADURUGAM_ACCIDENT_3PERSON_DEATH_SCRIPT_TN10026

Body:01_13_THIYAGADURUGAM_ACCIDENT_3PERSON_DEATH_SCRIPT_TN10026

Conclusion:லாரி மீது தனியார் பேருந்து அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு !

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே தியாகத்துருகம் புரவழிசாலையில் சென்னையிலிருந்து கோவையை நோக்கி 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து தனக்கு முன்னாள் புதுச்சேரிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி கம்பி ஏற்றி கொண்டு சென்ற லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக தனியார் பேருந்து மோதியதில் பேருந்தில் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த ஆத்துரைச் சேர்ந்த வினோத் ஈரோட்டைச் சேர்ந்த முகமது ஜில்பர் மற்றும் அடையாள தெரியாத ஒருவர் மூவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.மேலும் பேருந்துதில் பயணம் செய்த 10 க்கும் மேற்பட்டோர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகைச்சக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தியாக துருகம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் காயம்மடைந்தவர்களை மீட்டும், உயிரிழந்த உடல்களை பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிழந்தவர்கள் யார் எங்கிருந்து சென்றார்கள் என்பது குறித்த விவரங்களை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.