ETV Bharat / state

மதுபோதையில் வியாபாரி குத்தி கொலை.. விழுப்புரத்தில் இன்று ஒருநாள் கடையடைப்பு! - விழுப்புரம் வியாபாரி கொலை

விழுப்புரம் கடை வீதியில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டிருந்த சகோதர்கள் தாக்கியதில் இருவர் காயமடைந்தனர். மேலும் அவர்களை தடுத்த இப்ராஷிம் என்பரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விழுப்புரத்தில் இன்று வணிகர் சங்கம் சார்பாக கடையடைப்பு நடத்தப்படுகிறது.

Brothers drunken dispute in Villupuram stabbed the person who intervened to death
மதுபோதையில் தகராறு செய்த சகோதரர்கள் தடுத்தவரை குத்தி கொலை செய்தனர்
author img

By

Published : Mar 30, 2023, 10:18 AM IST

மதுபோதையில் தகராறு செய்த சகோதரர்கள் தடுத்தவரை குத்தி கொலை செய்தனர்

விழுப்புரம்: மேற்கு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட G.R.P தெருவைச் சேர்ந்த ஞானசேகர் என்பவர் எம்.ஜி.ரோட்டில் பழக்கடை நடத்தி வருகிறார். அவருக்கு சாந்தி என்ற மனைவியும், ராஜசேகர் (33) சுமை தூக்கும் தொழிலாளி, வல்லரசு (24) ஓட்டுநர் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஞானசேகருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அதனால் பழக்கடையில் வரும் பணத்தை குடும்பத்திற்கு தருவதில்லை என்றும் சாந்தி தனது மகன்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் இருவரும் மது அருந்திவிட்டு தந்தையிடம் இதைப் பற்றி கேட்க பழக்கடைக்கு சென்றுள்ளனர். அப்போது பழக்கடையில் தந்தை இல்லாததால் அங்கு உள்ளவர்களிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. மேலும் கடைவீதியில் உள்ள பிற கடைகளிலும் பிரச்சனை செய்துள்ளனர். அவர்கள் தாக்கியதில் தீபக், புண்ணியகோடி என இருவர் காயமடைந்தனர்.

பின்னர் வேறு ஒரு கடையில் இருந்தவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளனர். இதை அங்கிருந்த இப்ராஹிம் (45) என்பவர் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த சகோதரர்கள் வல்லரசு மற்றும் ராஜசேகர் இருவரும் இப்ராஹிமை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் இப்ராஹிமை குத்தியதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த இப்ராஹிமை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல முயன்ற போது அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற சகோதரர்கள் வல்லரசு, ராஜசேகர் இருவரையும் அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து வைத்து, இதுகுறித்து காவல்துறைக்கு தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான போலீசார், இப்ராஹிம் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அண்ணன் தம்பியான ராஜசேகர், வல்லரசு இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விழுப்புரம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் மட்டும் மாலை 5 மணி வரை அனைத்து கடைகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். விழுப்புரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கடைவீதியில் நடந்த கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் கஞ்சா போதையில் தகராறில் ஈடுப்பட்டு கொலை நடந்துள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், இரண்டு நபர்களும் மதுபோதையில் இருந்ததாகவும் கஞ்சா போதையில் இல்லை எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற மனைவியை கீழே தள்ளிவிட்டு கொலை செய்த கணவர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.