விழுப்புரம் மாவட்டத்தின் சர்வதேச நகரம், ஆரோவில். இந்தப் பகுதியை அதிகளவிலான வெளிநாட்டு பறவைகள் புகலிடமாகக் கொண்டுள்ளன. இவற்றிற்கு சில அடையாளம் தெரியாத நபர் தொடர்ச்சியாக இடையூறு செய்து வருகின்றனர்.
குறிப்பாக இந்தப் பறவைகளை வேட்டையாடுகின்றனர். இந்நிலையில் இன்று (டிசம்பர் 29) அப்பகுதியில் உள்ள ஆலமரத்தில் வசித்து வந்த சுமார் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் திடீரென கொத்து கொத்தாக மயங்கி விழுந்தன. சிறிது நேரத்தில் அப்பறவைகள் உயிரிழக்கத் தொடங்கின.
தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பறவைகளின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத நபர்கள் பறவைகளுக்கு உணவளிப்பது போல திட்டமிட்டு விஷம் வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரச் செயலை செய்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் வேட்டையாடி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க:குன்னூரில் அரிய வகை பறவை இனங்கள்!