ETV Bharat / state

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: 16 வயது சிறுவனுக்கு பிணை - கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கு

கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான கலவாத்தில் கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனுக்கு பிணை வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

kallakurichi student case  kallakurichi student death case  bail granted for minor boy in kallakurichi case  பள்ளி மாணவி மரண வழக்கு  கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கு  கள்ளக்குறிச்சி மாணவி வாக்கு
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு
author img

By

Published : Jul 31, 2022, 9:54 AM IST

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பான கலவரத்தில், இதுவரை வரை 300-க்கும் மேற்பட்டவர்கள் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தை வாட்ஸ்-அப் மூலம் தூண்டியதாக, வாட்ஸ்-அப் குழுக்கள் முழுவதுமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதில், 16 வயது சிறார் ஒருவரை 19 வயது என அறிவித்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கைதான சிறுவனின் தந்தை இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். “தன்னுடைய மகனுக்கு 19 வயது இல்லை. அவனுக்கு 16 வயதுதான். அவனுக்கு பிணை வழங்க வேண்டும். அவனுடைய வயது குறித்த சான்றிதழை நான் சமர்ப்பிக்கிறேன்" என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இம்மனுவை விசாரித்த நடுவர் முகம்மது அலி, குறிப்பிட்ட நபர் சிறுவன் என்பதற்கான ஆதாரமாக பிறப்பு சான்று, ஆதார் கார்டு, பள்ளி மாற்றுச் சான்றிதழ், பள்ளி மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, அச்சிறுவனை விழுப்புரத்தில் உள்ள சிறுவர் நீதிக் குழுமத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

அதன்படி, காவல் துறையினர் கடந்த 22ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அச்சிறுவனை ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் விழுப்புரம் சிறுவர் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நடுவர் சாந்தி (பொறுப்பு) சிறுவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிணையில் விடுவித்தார்.

இதையும் படிங்க: சஞ்சய் ராவத் வீட்டில் மீண்டும் அமலாக்கத் துறை ரெய்டு... கைது செய்ய வாய்ப்பு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.