ETV Bharat / state

சுவடே இல்லாமல் 3 பல்லவர் கால கோயில்கள் மாயம் - பொன்.மாணிக்கவேல் பரபரப்பு தகவல்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சுவடே இல்லாமல் மூன்று பல்லவர் கால கோயில்கள் காணமல்போயியுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் குற்றம்சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 27, 2023, 3:48 PM IST

சுவடே இல்லாமல் 3 பல்லவர் கால கோயில்கள் மாயம் - பொன்.மாணிக்கவேல் பரபரப்பு தகவல்

விழுப்புரம்: கைலாசநாதர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் நேற்று சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரில் தற்போது பக்தஜனேஸ்வரர் கோயில் மட்டுமே இருந்து வருவதாகவும், அந்த ஊரில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கலிநாரீஸ்வரன் சிவன் கோயில், திருமேற்றளி மகாவிஷ்ணு கோயில், அகத்தீஸ்வரம் கோயில் என மேலும் 3 கோயில்கள் இருந்துள்ளதற்கான ஆவணங்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், 1947ல் ஆங்கிலேயர்கள் சுதந்திரம் வழங்கிவிட்டு சென்ற பிறகு காலப்போக்கில் அந்த 3 கோயில்களுமே இருந்த இடம் தெரியாமல் சுவடே இல்லாமல் போய்விட்டதாகவும், இதேபோல் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏமப்பூரில் உள்ள பழமை வாய்ந்த கோயிலிலிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான திருபுவன சுந்தரர் மற்றும் திருபுவன சுந்தரி ஆகிய இரண்டு சாமி சிலைகளும் காணாமல் போயிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த இரண்டு சாமி சிலைகளும் தற்போது வெளிநாட்டில் உள்ளதால் இது குறித்து சிவனடியார்கள் மூலம் காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாகக் கூறினார். மேலும் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளை நாடுவோம் என்றும், அவர்களும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட இருப்பதாகத் தெரிவித்தார்.

திருநாவலூரில் காணாமல் போயிருக்கும் பல்லவர் காலத்து 3 கோயில்களையும் கண்டுபிடிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள சாமி சிலைகள் அனைத்துமே இங்கிருந்து தான் அங்குச் சென்றிருப்பதாகவும் அது எப்படி அங்குப் போனது எனக் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: மாசி திருவிழா 2ஆம் நாள்: களைகட்டிய திருச்செந்தூர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.