ETV Bharat / state

விழுப்புரத்தில் கண்டெடுக்கப்பட்ட 'கீழடி' - Discovery of the elderly humiliation of the Tamils

விழுப்புரம்: கொடுக்கூர் கிராமப் பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

viluppuram kodukkur
viluppuram kodukkur
author img

By

Published : Aug 7, 2020, 10:00 PM IST

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அருகே உள்ளது கொடுக்கூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் செங்கல்சூளை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழிகள், மருந்து குடுவைகள், எலும்புகள், பானை ஓடுகள், கருப்பு மற்றும் சிவப்பு நிற பானைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

விழுப்புரம் கொடுக்கூர் கிராமம்

இது குறித்து தொல்லியல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த அலுவலர்கள் இதனை கைப்பற்றி பாதுகாப்பாக வைத்தனர். மேலும், விழுப்புரம் மக்களவை உறுப்பினர் துரை ரவிக்குமார் அப்பகுதிக்கு நேரில் சென்று கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் குறித்து தொல்லியல் துறை அலுவலர்களுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார்

இதைத் தொடர்ந்து இந்த பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு தொல்லியல் துறை இயக்குநர் உதயசந்திரனிடம், ரவிக்குமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: 14ஆவது ஆண்டு நெல் திருவிழா கோலாகல தொடக்கம்! விவசாய பெருமக்கள் ஆரவாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.