ETV Bharat / state

தமிழை வைத்து ஆட்சிக்கு வந்த திமுக தமிழ் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை - அன்புமணி ராமதாஸ்

தமிழை வைத்து ஆட்சிக்கு வந்த திமுக தமிழ் வளர்ச்சிக்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும் இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை காட்டிலும் தாய் மொழியை படிக்காமல் மாணவர்கள் பட்டம் வாங்கும் ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது எனவும் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Anbumani Ramadoss said Tamil Nadu is the only state students can get degrees without studying their mother tongue Tamil
தாய்மொழியான தமிழை படிக்காமலேயே மாணவர்கள் பட்டம் பெறும் ஒரே மாநிலம் தமிழகம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்
author img

By

Published : Apr 3, 2023, 11:09 AM IST

தாய்மொழியான தமிழை படிக்காமலேயே மாணவர்கள் பட்டம் பெறும் ஒரே மாநிலம் தமிழகம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் அன்னைத் தமிழின் அழகிய சொற்கள் அடங்கிய தமிழ்ப் பெயர் பதாகைகள், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான தமிழ்ப் பெயர்கள் கொண்ட பதாகைகள் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் கலந்துகொண்டு பதாகைகளைத் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பாமக மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டமும் நடைபெற்றது. அதில் தமிழ்ப் பெயர்ப் பலகைகளை அமைக்கக் கூறும் துண்டறிக்கைகளை அந்தந்த பகுதிகளில் வழங்குவது குறித்த ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ், "லிக்னைட் தாது எடுப்பதற்காக மத்திய அரசு கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியிலும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த வடசேரி பகுதியிலும் நிலக்கரி எடுப்பதற்குத் தமிழக அரசுக்குத் தெரிவிக்காமல் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது.

அந்தந்த பகுதிகளில் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ஏக்கர் வரை நிலமானது கையகப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக தொழில் துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர் ஆகியோருக்கும் தெரியவில்லை. நெய்வேலியில் தொடர்ந்து நிலக்கரி எடுத்ததால் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவு, காற்று மாசு மற்றும் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கும் வேளாண்மைக்கும் ஆதரவாக இல்லாமல் என்எல்சி நிர்வாகத்துக்குத் துணையாக நிற்கிறார். மேலும் விவசாயிகள் கூட்டத்தில் என்எல்சி குறித்துப் பேசக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். சுங்கச் சாவடி கட்டண உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. 60 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மற்றவைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததன்படி பார்த்தால் 37 சுங்கச் சாவடிகளை எடுத்து இருக்க வேண்டும் இதுவரை எடுக்கப்படவில்லை.

தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நீதிமன்றத்திற்குச் சென்று உடனடியாக 37 சுங்கச்சாவடிகளை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு வருங்காலத்தில் 15,000 மெகாவாட் உற்பத்தியில் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு வெப்பமான ஆண்டு அதற்கு ஏற்ற முறையில் மக்களுக்கு உதவும் வகையில் சிறப்பான திட்டங்களைத் தீட்ட வேண்டும். கோவிட் பரவல் குறித்துப் பயப்படத் தேவையில்லை, கடந்த 10 மாதங்களில் 98 சதவீதம் ஒமைக்ரான் தொற்று பரவுதல் குறைந்து விட்டது.

ஆசிரியர்கள், பேராசிரியர்கள் காலியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிக்கையைத் தமிழக அரசுக்கு அளித்துள்ளேன். இது தொடர்பாக விரைவில் காலிப் பணியிடங்களை நிரப்புவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் விவாதிப்பார்கள் எனவும், விழுப்புரத்தில் நடந்த கொலை குறித்து கேள்விக்குப் பதில் அளித்த அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழகத்தில் மது, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் அதிகமாகப் புழங்குவதால் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போதையால் தான் அதிகமாகக் குற்றங்கள் நடைபெறுகிறது" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, தமிழ் வளர்ச்சி குறித்து பேசிய அன்புமணி ராமதாஸ் இந்தியாவின் பிற மாநிலங்களில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் ஆனால் தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழை படிக்காமலேயே பட்டம் பெறும் சூழல் இருப்பதாகவும், தமிழை வைத்து ஆட்சிக்கு வந்த திமுக பேச்சளவில் மட்டுமே பிரபலப்படுத்தியுள்ளதாகவும் வளர்ச்சிக்கு ஏதும் செய்யவில்லை என்றும் கடுமையாக குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: "அதிமுகவில் இருந்து விலகியது வருத்தம்" புது ரூட்டில் பயணிக்கும் நயினார் நாகேந்திரன்.. அடுத்த திட்டம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.