ETV Bharat / state

மதுவிலக்கு அமைச்சரை மாற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கள்ளச்சாராயத்தினை தடுக்கத் தவறியதை தமிழ்நாடு அரசின் தோல்வியாக பார்ப்பதாகவும், மதுவை திணிக்கிற அரசாக தமிழ்நாடு அரசு உள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மதுவிலக்கு அமைச்சரை மாற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
மதுவிலக்கு அமைச்சரை மாற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
author img

By

Published : May 17, 2023, 9:57 AM IST

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு

விழுப்புரம்: மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், “மரக்காணம் எக்கியார் குப்பம் மற்றும் சித்தாமூர் ஆகிய இரு இடங்களில் கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் (தற்போதைய நிலவரப்படி 22 பேர் உயிரிழப்பு) உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இது அரசின் தோல்வியாக பார்க்கிறேன். கள்ளச்சாராயத்தினை தடுக்க தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளச்சாராயம் காவல் துறையினருக்கும், அரசியல் கட்சியினருக்கும் மற்றும் விஏஓவுக்கும் தெரியாமல் ஒரு சொட்டு கூட விற்பனை செய்ய முடியாது.

பல ஆண்டுகளாக இந்த இரு பகுதிகளிலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு முழுக் காரணம் தமிழ்நாடு அரசுதான். அரசின் முழுத் தோல்வியாக இதைப் பார்க்கிறேன். கள்ளச்சாராயத்தினைத் தடுக்கத்தான் டாஸ்மாக் திறக்கப்பட்டது. ஆனால், இரண்டிற்குமே தற்போது வித்தியாசம் இல்லை.

கடந்த ஓராண்டில் டாஸ்மாக் சாராயத்தினால் தமிழ்நாட்டில் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு அரசு உடனடியாக படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மது இல்லாமல் வாழ முடியாது என்ற சூழலை அதிமுகவும், திமுகவும் உருவாக்கி உள்ளது.

கடந்த ஆண்டில் 9ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்கில் விற்பனை உயர்ந்துள்ளதாக அமைச்சர் கூறுகிறார். டாஸ்மாக்கில் விலை ஏற்றம் செய்யபட்டதால் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கூலித் தொழிலாளிகள் கள்ளச்சாராயத்திற்கு மாறி உள்ளனர். மதுவை திணிக்கிற அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது.

விளையாட்டுப் போட்டி, திருமணங்கள் போன்ற நிகழ்வுகளில் மது குடிக்கலாம் என மதுவைத் திணிக்கிறது. இரண்டு மாவட்ட எஸ்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வது மட்டும் போதுமானது அல்ல. மதுவிலக்கு அமைச்சரை மாற்ற வேண்டும். மதுவை திணித்து தலைமுறையினரை மாற்றி உள்ளனர்.

மதுவிலக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை மாற்றி, சமூக அக்கறை உள்ளவரை நியமனம் செய்ய வேண்டும். 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், இதுவரை மதுவிலக்கு தொடர்பாக என்ன செய்தீர்கள்? மக்களைக் காப்பாற்றுவது திமுக அரசின் நோக்கம் அல்ல. மூன்று தலைமுறையினரை மதுவிற்கு மாற்றி உள்ளனர்.

இந்தியாவிலேயே அதிக விபத்துகள் நடைபெறுகிற மாநிலமும், விதவைகள் உள்ள மாநிலமுமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் மது ஆறாக சென்று கொண்டிருக்கிறது. இரண்டு நாட்களில் 8 ஆயிரம் லிட்டர் சாராயத்தை கைப்பற்றி உள்ளார்கள். இத்தனை நாட்களாக என்ன செய்தார்கள்?

மதுவிலக்கு கொண்டு வர முதன்மைக் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என பெண்கள் கொதித்து போய் உள்ளனர். தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் மது விற்பனை சந்துக் கடைகளில் நடைபெறுகிறது. இது அரசுக்கும் தெரியும். இதை வைத்து இங்கு பெரிய ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கள்ளச்சாராய மரணங்கள்: தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.