விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த செய்யாத்துவிண்ணான் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் எலும்புக்கூடாகக் கிடப்பதை அறிந்த விக்கிரவாண்டி காவல்துறையினர் எலும்புக்கூட்டைக் கைப்பற்றினர்.
இதனிடையே, அப்பகுதியில் யாராவது காணாமல் போனார்களா என்பது பற்றி விசாரித்தனர். இதில், அதே ஊரைச் சேர்ந்த ராமானுஜம் வயது 65 என்கிற கூலித்தொழிலாளி கடந்த ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி முதல் காணாமல் போன விவரம் விசாரணையில் தெரியவந்தது.
![காணாமல் போன முதியவர் ஒரு மாதத்திற்குப் பின் எலும்புக்கூடாக மீட்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14088295_vpm.jpg)
இதனையடுத்து, இறந்தவரின் உடலை அவரது மகள் அடையாளம் காட்டினார். தொடர்ந்து, விக்கிரவாண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே உடற்கூராய்வு பரிசோதனை செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: தரங்கம்பாடி; கனமழை காரணமாக உளுந்து, நிலக்கடலை சாகுபடி பாதிப்பு