ETV Bharat / state

புதுச்சேரியிலிருந்து கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்: ஓட்டுநர் தப்பியோட்டம் - காவல்துறையினர் பறிமுதல்

விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே புதுச்சேரியிலிருந்து கடத்திவரப்பட்ட இரண்டாயிரத்து 400 மதுபாட்டில்களைக் காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர்.

Viluppuram Police
Alcohol Seized at Viluppuram
author img

By

Published : Jan 10, 2020, 1:24 PM IST

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள ஓமலூர் பேருந்து நிறுத்தத்தில் கோட்டக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் விஷ்ணுப்பிரியா தலைமையிலான காவல் துறையினர் இன்று அதிகாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது புதுச்சேரியிலிருந்து சென்னை மார்க்கமாக வேகமாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் எவ்வித ஆவணங்களின்றி 50 பெட்டிகளில் இரண்டாயிரத்து 400 மதுபாட்டில்கள் கடத்திவந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல்செய்த காவல் துறையினர் தப்பியோடிய வாகன ஓட்டுநரை தேடிவருகின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: காலி மதுபாட்டில்களால் கேலி சித்திரமாகும் சுகாதாரம்...

Intro:விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 2,400 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
Body:விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள ஓமலூர் பேருந்து நிறுத்தத்தில் கோட்டக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் விஷ்ணுப்பிரியா தலைமையிலான போலீஸார் இன்று அதிகாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை மார்க்கம் நோக்கி வேகமாக வந்த TN 29 AA 2449 என்ற பதிவு எண் கொண்ட மினி டெம்போ வேனை நிறுத்தி சோதனை செய் துள்ளனர்.

அப்போது அதில் எவ்வித அனுமதியோ, உரிமமோ இன்றி 50 பெட்டிகளில் 2,400 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

Conclusion:இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் தப்பியோடிய வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர். மேலும் இதுத்தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(இந்த செய்திக்கான புகைப்படம் வாட்ஸ்-ஆப்பில் உள்ளது)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.