ETV Bharat / state

டிராக்டர் ஓட்டி, பயிர்களுக்கு மருந்து தெளித்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர், பயிர்களுக்கு மருந்து அடித்தும், டிராக்டர் மூலம் ஏர் ஓட்டியும், நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

AIADMK candidate election campaign in a differnt way like spraying on crops

author img

By

Published : Mar 19, 2021, 12:14 PM IST

Updated : Mar 19, 2021, 12:24 PM IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன். இவர், விவசாயிகளிடம் வாக்கு சேகரிக்க சென்ற நிலையில், விவசாயி ஒருவர் மருந்து தெளித்துக் கொண்டிருந்ததைக் கண்டு, அவரது பணி சுமையை குறைக்கும் வகையில், தானும் விளை நிலத்தில் இறங்கி நெற்பயிர்களுக்கு மருந்து தெளிக்கத் தொடங்கினார்.

பயிர்களுக்கு மருந்து தெளித்து நூதன முறையில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

தொடர்ந்து, அருகில் மற்றொரு விவசாயி, டிராக்டர் மூலம் உழவு செய்து கொண்டிருந்ததைக் கண்ட அவர், விவசாயியின் டிராக்டரை வாங்கி, தானும் உழவு செய்து, ’விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டிருக்கும் அதிமுக அரசுக்கு வாக்களியுங்கள்’ என நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் பணியை செய்தார்.

வேட்பாளரின் இந்த நூதன வாக்கு சேகரிப்பு முறை, அங்கிருந்த விவசாயிகளை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

இதையும் படிங்க...முதலமைச்சர் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு

Last Updated : Mar 19, 2021, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.