விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளராக காணை ஒன்றிய கழகச்செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரால் அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து முத்தமிழ்ச்செல்வன் நேற்று தமிழ்நாடு முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோரை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகைபுரிந்த முத்தமிழ்ச்செல்வனுக்கு அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பளித்தனர்.
மேலும் விக்கிரவாண்டி நகர நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சரான ஜெயலலிதாவின் படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய பின் நகரப்பகுதிகளில் வாக்கு சேகரிக்கச் சென்றார்.
இதையும் படிங்க: விவசாயிகளே வாங்க தெரிஞ்சுக்கலாம் -குறைந்த நீரில் அதிக லாபம்