ETV Bharat / state

சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கு - வேல்முருகன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு - விழுப்புரம் மாவட்ட செய்திகள்

சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 14 பேர் மீதான வழக்கு விசாரணையை, நவம்பர் மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேல்முருகன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

author img

By

Published : Oct 20, 2021, 8:52 PM IST

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, வரிகொடா இயக்கத்தின் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

அப்போது சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இதில், சுங்கச்சாவடியில் இருந்த கம்ப்யூட்டர், கண்காணிப்பு கேமரா என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்தன.

சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கு

இதுதொடர்பாக,வேல்முருகன் உள்பட 14 பேர் மீது உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வேல்முருகன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பின்னர் இந்த வழக்கு விசாரணையை, விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு முதன்முதலாக இந்த வழக்கு இன்று (அக்.20) விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 12 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். 2 பேர் ஆஜராகவில்லை. அவர்களுக்குப் பதிலாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை: இயக்குநர் ஷங்கரின் மருமகன் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.