விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் சண்முகபெருமாள் தெருவைச் சேர்ந்த சங்கரின் மகன் சரவணன் (36). இவர் தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இவர் மீது விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் லாட்டரி சீட்டு விற்பனை, அடிதடி, கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று சரவணனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.
அதன்பேரில் சரவணனை நேற்று கைதுசெய்த காவல் துறையினர் அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டம் - விழுப்புரம் எஸ்பி எச்சரிக்கை