விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அரசூர் கிராமத்தில் ஸ்ரீசம்ஹார பைரவர் திருக்கோயில் உள்ளது. திருக்கோயிலின் முக்கிய நிகழ்வாக தேய்பிறை அஷ்டமி தினத்தில் நேற்று ஸ்ரீசம்ஹார பைரவருக்கு மாலை முதல் நள்ளிரவு வரை அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீசம்ஹார பைரவருக்கு அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: மாயூரநாதர் கோயில் யானை ’அபயாம்பிகை’க்கு சங்கிலியுடன் கூடிய புதிய பெயர் பலகை!!