ETV Bharat / state

இஸ்லாமியராக பிறந்து சிவபக்தரான ‘சித்தர் சிவஸ்ரீ படேசாஹிப்’ - அனைத்து மதத்தினரும் வழிபடும் ஓர் அதிசய கோயில்! - all religions in villupuram

விழுப்புரம் மாவட்டம் சின்னபாபு சமுத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகான் படே சாயுபு ஜீவ சமாதி சித்தர் பீடத்தில் அனைத்து மதத்தினரும் வழிபட்டு செல்கின்றனர். இக்கோயிலின் சிறப்பம்சமாக சைவ முறைப்படி திருநீறும், வைணவ முறைப்படி துளசி தீர்த்தமும் அளிக்கப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி மயிலிறகைக் கொண்டு ஓதி, சந்தனம் அளித்து சர்வ சமய வழிபாடு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இஸ்லாமியராக பிறந்து சிவபக்தரான ‘சித்தர் சிவஸ்ரீ படேசாஹிப்’ - அனைத்து மதத்தினரும் வழிபடும் ஓர் அதிசய கோயில்!

author img

By

Published : Jul 23, 2022, 5:33 PM IST

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே சின்னபாபு சமுத்திரத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீ மகான் படே சாயுபு ஜீவ சமாதி சித்தர் பீடம். ‘மனிதருள் மதமேனடா.. மானிடா..’ என்ற வள்ளலாரின் கூற்றுப்படி, அனைத்து மதத்தைச் சார்ந்த பக்தர்களும் இந்த கோயிலுக்கு வருகை புரிந்து, சித்தரை வழிபட்டுச் செல்வது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.

ஸ்ரீ மகான் படே சாயுபு ஒரு இஸ்லாமிய சமூகத்தில் பிறந்தவர். சிவன் பக்தரான இவர், வடக்கு திசையில் இருந்து வந்தவர் எனவும் பின்பு தமிழ்நாட்டில் படிப்படியாக ஒவ்வொரு திசையாக சென்று இறுதியாக விழுப்புரம் மாவட்டத்தை வந்தடைந்ததாக வரலாறு கூறுகிறது.

சித்தரின் அணுகுமுறை: பார்ப்பதற்கு நடுத்தர உயரமும், சிவந்த நிறமும், தலையில் ஒரு குல்லா, இடுப்பில் அரையாடை, முகத்தில் சித்திரத்தை தூரிகையால் செதுக்கப்பட்டது போன்ற முக அமைப்பு, விழிகளில் கருணையும், மந்திர ஜபத்தை மட்டுமே உச்சரிக்கும் மெளன குரலும் இவரின் சிறப்பாக கூறப்படுகிறது.

சித்தர் சிவஸ்ரீ படேசாஹிப்
சித்தர் சிவஸ்ரீ படேசாஹிப்

யாரிடமும் எதுவும் பேசமால், சைகை மொழியிலும், விழி அசைவால், இவரை நாடி வரும் பக்தர்களுக்கு பிணியை விபூதி கொடுத்து தீர்க்க முடியாத பிணிகளை தீர்ப்பார் என இவரை நாடிவரும் பக்தர்கள் புகழ் பாடுகின்றனர். ‘சாஹிப்’ என்றால் உயர்ந்தவர் என்று பொருள். 'படே' என்றால் மிகப் பெரிய என்று பொருள். அதற்கேற்ப மிகப்பெரிய சித்த புருஷராக விளங்கியுள்ளார், சிவஸ்ரீ படே சாஹிப்.

தன் பெயருக்கேற்ப அன்பிலும் அருளிலும் உயர்ந்த நிலையில் வாழும் உத்தமராகவும் இருந்துள்ளார். இதனால்தான் என்னவோ பக்தர்கள் இவரை அன்பர் 'பெரியய்யா', 'சாயபு', 'படே சாயபு' என்று அழைத்ததாக கூறப்படுகிறது. அதீத கடவுள் நம்பிக்கையால் அனைத்து விதமான மத அடையாளங்களையும் துறந்து, அனைத்து சமூக மக்களுக்கும் பொதுவான நபராக மக்கள் மனதில் நம்பிக்கை விதைத்துள்ளார்.

சித்தர் சிவஸ்ரீ படேசாஹிப்
சித்தர் சிவஸ்ரீ படேசாஹிப்

மனிதநேயமே புண்ணிய மந்திரமாக இவரது ஜீவ சமாதி சித்தர்‌ பீடம் அமைந்திருப்பதால், இவரின் பீடத்திற்கு இந்து, முஸ்லீம், கிறித்தவர்கள் உள்பட அனைத்து மதத்தினரும் வேறுபாடுகள் இன்றி வழிபட்டு செல்கின்றனர். இந்த ஜீவ சமாதியை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் தரிசித்துச் செல்கின்றனர்.

வழிபாட்டு முறைகள்: சித்தரை வழிபட வரும் மக்களுக்கு நீர்மோர், பானகம் அன்னதானமாக விநியோகம் செய்யப்படுகிறது. செவ்வாய், வியாழக்கிழமைகளில் இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் இங்கே திரளாக வந்து சித்தர் வழிபாடு செய்கின்றனர். மனநோய், செய்வினை, ஏவல் பில்லி, சூணியம் போன்ற பல மன இன்னல்களுடன் வரும் பக்தர்களுக்கு சித்தரின் அருள் கிடைக்கப் பெற்று பிரச்சனைகள் தீர்க்கப்படுவதாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் முழு மனதுடன் தெரிவிக்கின்றனர்.

இஸ்லாமியராக பிறந்து சிவபக்தரான ‘சித்தர் சிவஸ்ரீ படேசாஹிப்’ - அனைத்து மதத்தினரும் வழிபடும் ஓர் அதிசய கோயில்!

இக்கோயிலின் சிறப்பம்சமாக சைவ முறைப்படி திருநீறும், வைணவ முறைப்படி துளசி தீர்த்தமும் அளிக்கப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி மயிலிறகைக் கொண்டு ஓதி, சந்தனம் அளித்து சர்வ சமய வழிபாடு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடிகார முள் திசையில் அங்கப் பிரதட்சணம் சுற்றி வருவது மற்றும் கடிகார முள் சுற்றும் திசைக்கு எதிர் முனையில் சுற்றுவதாக பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.

இங்குள்ள மகிழ் மரத்தை திருமணம், குழந்தை வரம் வேண்டி 21 முறை சுற்றியும், மற்ற பிரச்னைகளுக்கு பக்தர்கள் 11 முறை சுற்றியும் வழிபாடு செய்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாசனை மிகுந்த வத்திகளை சித்தருக்கு கொளுத்தி வழிபடுவதால், இக்கோயிலில் நறுமணம் வீசும் இயற்கைச் சூழல் காணப்படுகிறது.

இங்கு வருவதால் மனநிம்மதி மற்றும் உடல் நிம்மதி கிடைத்து, வாழ்வில் நிம்மதியாக இருப்பாதாக வருகை புரியும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கோயில் உறுப்பினர்களிடம் உரிய அனுமதி பெற்று சித்தரின் ஜீவசமாதி ஆலயத்தில் இரவில் பக்தர்கள் தங்கிக்கொள்ளலாம் என கூறுகிறார்கள்.

வழிபாட்டு நேரம்: ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில், சித்தர் சிவஸ்ரீ படே சாஹிப்பின் குருபூஜை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயம் இந்துசமய அறநிலையத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. எம்மதமும் சம்மதம் என பக்தர்கள் ஒற்றுமையுடன் இந்த சித்தர் கோவிலுக்கு வருகை புரிந்து, சித்தரை வழிபட்டு மன நிம்மதியுடன் செல்கின்றனர்.

இக்கோயிலின் தரிசன நிகழ்வு தினசரி காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கோயில் திறந்திருக்கும். வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி கோயில் திறந்திருக்கும்.

இதையும் படிங்க: கொல்லிமலை கோயிலுக்கு 'இப்படி' ஒரு பெயர் இருப்பதற்கு காரணம் இதுதான்.. அறியப்படாத சில வரலாறு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.