ETV Bharat / state

திருடச் சென்ற இடத்தில் ஊஞ்சல் ஆடிய திருடன் கைது - Police detained at the bus station

விழுப்புரம்: திருடச் சென்ற வீட்டில் ஊஞ்சலில் ஆடிய திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சச்சிதானந்தம்
author img

By

Published : Oct 9, 2019, 3:08 PM IST

விழுப்புரம் சுதாகர் நகரை சேர்ந்தவர் இளங்கோ(56). இவர் தென்பேர் அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் 18ஆம் தேதி இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கியுள்ளார்.
அப்போது அவருடைய வீட்டிற்குக் கொள்ளையடிக்க வந்த ஒருவர், வீட்டின் 2ஆவது மாடியில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து சிறிது நேரம் ஆனந்தமாக ஆடினார். இந்த காட்சி, அந்த வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

ஊஞ்சலில் ஆடும் சச்சிதானந்தம்
ஊஞ்சலில் ஆடும் சச்சிதானந்தம்

இது குறித்து ஆசிரியர் இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விழுப்புரம் வி.மருதூர் பகுதியைச் சேர்ந்த சச்சிதானந்தம் (32) என்பதும், கொள்ளையடிப்பதற்காக ஆசிரியர் இளங்கோ வீட்டில் புகுந்ததும், அங்கு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருட முயன்றபோது நாய் குரைத்துள்ளது. அதற்கு பயந்து வீட்டின் மாடிக்குச்சென்றவர் அங்கிருந்த ஊஞ்சலில் சிறிது நேரம் ஆடிவிட்டு அங்கிருந்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சச்சிதானந்தத்தை காவல் துறையினர் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்குத் தப்பிச்செல்ல முயன்றபோது அவரை காவல் துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Intro:விழுப்புரம்: விழுப்புரத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஊஞ்சல் திருடன் போலீஸார் கைது செய்துள்ளனர்.Body:விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சுதாகர் நகர் பகுதியில் கடந்த ஒரு வருடமாகவே, திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்து வந்துள்ளது.

இதனால் இந்த திருட்டில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் அப்பகுதியில் வசித்துவரும் ஆசிரியர் இளங்கோ என்பவர் இறங்கினார்.

இதையடுத்து அவர், தனது வீட்டை சுற்றிலும் 6 இடங்களில் சிசிடிவி கேமராவை பொருத்தினார்.

இந்நிலையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி பக்கத்து வீட்டில் இருக்கிற இருசக்கர வாகனத்திலிருந்து பெட்ரோல் திருடப்பட்டிருந்ததை அறிந்த இளங்கோ, தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சோதனை செய்து பார்த்தார்.

அப்போது திருட வந்த இளைஞர் தொடர்ந்து இருசக்கர வாகனங்களின் உதிரிபாகங்களையும், பெட்ரோலையும் திருடுவதோடு அல்லாமல் மாடி பகுதிக்குச் சென்று அங்குள்ள ஓய்வறையில் உள்ள ஊஞ்சலில் சிறிது நேரம் உட்கார்ந்து இளைப்பாறிவிட்டு சென்றுள்ளார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இளங்கோ, இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதனடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேடிவந்தனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த நபர் விழுப்புரம் வி.மருதூர் பகுதியைச் சேர்ந்த சச்சிதானந்தம் (35) என்பதைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில்.,

"இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடி விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்த சச்சிதானந்தம், சம்பவத்தன்று ஆசிரியர் இளங்கோ வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடுவதற்காகச் சென்றிருக்கிறார்.

அப்போது அங்கிருந்த நாய் அவரைப் பார்த்து குரைத்திருக்கிறது. அதில், பயந்துபோன சச்சிதானந்தம் மொட்டைமாடிக்குச் சென்றிருக்கிறார்.

Conclusion:பெட்ரோல் திருடுவதற்கு அங்கு எதாவது பாட்டில்கள் இருக்குமா என்றுதான் செல்போன் டார்ச் மூலம் தேடியிருக்கிறார். எதுவும் கிடைக்கவில்லை என்றவுடன் தான் அங்கிருந்த ஊஞ்சலில் ஆடி ரிலாக்ஸ் செய்ததாக தெரிவித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.