விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 சிறுவன், அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களாகவே பள்ளிக்கு வரும் மாணவிகளை அவர் கேலி, கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அப்பள்ளியின் தலைமையாசிரியர் சேவியர் சந்திரசேகர், மாணவனை அழைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் நேற்று கஞ்சா மற்றும் மதுபோதையில் பள்ளிக்கு சென்று தலைமை ஆசியரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் படுகாயம் அடைந்த தலைமை ஆசிரியருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவலறிந்த கண்டமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பள்ளி மாணவனை இடை நீக்கம் செய்ய மாவட்ட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: ஒலிபெருக்கி மூலம் பாடல் ஒலிபரப்புவதில் பகை; இளைஞர் கொலை - 6 பேர் கைது