விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை எறையூர் கிராமத்தைச் சேர்ந்த இருதயராஜ், கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலம் பகுதியில் லாரியில் வைக்கோலை ஏற்றிக்கொண்டு திரும்பிச் சென்றுள்ளார். அப்போது, வைக்கோலில் மின்கம்பி உரசியதால், லாரியில் இருந்த வைக்கோல் கட்டு தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து, சின்னசேலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீவிரமாக செயல்பட்டு லாரியில் எரிந்து கொண்டிருந்த வைக்கோலை அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்தில் லாரியில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.