விழுப்புரம் மாவட்டம் செய்யார் பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம்(25). இவர் தனக்கு சொந்தமான மாருதி சுசுகி ஈகோ காரை 6 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக இணையத்தில் விளம்பரப்படுத்தியிருந்தார். இந்த விளம்பரத்தை பார்த்த சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சுலைமான் என்பவர் அமிர்தலிங்கத்தை செல்போனில் அழைத்து தான் திண்டிவனம் வந்து காரை வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.
இதனை நம்பி அமிர்தலிங்கம் செய்யாறு பகுதியில் இருந்த தனது காரை திண்டிவனம் ரயில் நிலையத்திற்கு எடுத்து வந்துள்ளார். அந்த சமயம் சுலைமான் சினிமா பாணியில் காரை ஓட்டிப்பார்கிறேன். அதன்பின் தனக்கு பிடித்திருந்தால் வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி அவரிடம் தனது ஆதார் அடையாள அட்டையை கொடுத்துவிட்டு காரினை ஓட்டிச் சென்றுள்ளார்.
வெகுநேரமாகதிவும் அவர் வராததால் சந்தேகம் அடைந்த அமிர்தலிங்கம் திண்டிவனம் சரக காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக உடனடி விசாரணை மேற்கொண்ட திண்டிவனம் ஏடிஎஸ்பி அபிஷேக் குப்தா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலானோர் தனிப்படை அமைத்து திருடப்பட்ட காரினை தேடினர்.
பல்வேறு இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அந்த வகையில் திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் போலீசார் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்னை நோக்கி வந்த காரை சோதனை செய்தில் அந்த வாகனத்தின் பதிவு எண் போலியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காரினை ஓட்டி வந்த நபரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் அமிர்தலிங்கத்திடம் இருந்து காரை திருடிய சுலைமான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். காரும் மீட்கப்பட்டது.
இதையும் படிங்க:போலீஸ் வண்டியையே ஸ்கெட்ச் போட்டு அபேஸ் செய்த 'பலே' திருடர்கள்