விழுப்புரம்: விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே தனியார் திருமண மண்டபத்தில் மேலக்கொந்தை பகுதியை சேர்ந்த மைக்கேல் ராஜ் மற்றும் கப்பியாம்புலியூர் பகுதியைச் சேர்ந்த பரினிஷா என்பவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமண நிகழ்வில் முக்கிய அரங்கேற்றமாக டிஜே எனப்படும் மேற்கத்திய கலாச்சார இசை நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட சிறிய தள்ளுமுள்ளு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் பலமாக தாக்கி கொண்டனர்.
திருமண நிகழ்வு சிறிது நேரத்தில் கலவர பூமியாக மாறியது. இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை - அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை