மயிலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகன் கௌதம் (27), கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 3ஆம் தேதி அப்பகுதியில் உள்ள உணவகத்திற்கு செல்லவிருந்த ஒன்பது வயது சிறுமியை தன் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மயிலம் காவல் நிலையம் எதிரே உள்ள புளியந்தோப்பிற்கு சிறுமியை அழைத்துச் சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் உறவினர் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த ஆய்வாளர் லதா, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கௌதம் என்பவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் - பெட்ரோலிய வணிகர்கள் சங்கம்