விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே வீரங்கிபுரம் என்ற கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த 5 இளைஞர்கள் இணைந்து, மதுபோதையில் பள்ளி கட்டிடம் மற்றும் வகுப்பறை கதவுகள் ஆகியவற்றை சேதப்படுத்தி உள்ளனர்.
மதுபோதையில் இளைஞர்கள், அங்கிருந்த கருங்கல்லை தூக்கி, வகுப்பறையின் கதவுகளின் மீது வீசியும், பள்ளியின் கட்டிடம் மற்றும் வகுப்பறை ஜன்னல்களை சேதப்படுத்தி உள்ளனர். மது மயக்கத்தில் எத்தனை முறை கல்லைத் தூக்கி வீசினாலும் கதவு உடையவே இல்லை, திறக்கவும் இல்லை என்று போதையில் புலம்பியும் உள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்று கிராம முக்கிய நிர்வாகிகள் சிலர் ஒன்றாக பள்ளி நிர்வாகத்திடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அரசு பள்ளியின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய போதை இளைஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தெரிகிறது.
இதையும் படிங்க: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!