விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கம் பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று வழக்கம் போல் விற்பனையை முடித்துவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதனை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஐந்து பெட்டி மதுபானங்கள் மற்றும் ரூ.3 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து இன்று (செப்.9) காலை தகவலறிந்த ஊழியர்கள் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை அடிக்கப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.