ETV Bharat / state

கொடிகட்டிப் பறந்த 3 நம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை : இருவர் கைது - Viluppuram District News

விழுப்புரம் : தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரியில் கொடிகட்டிப் பறந்த சென்னையைச் சேர்ந்த முதலாளி உள்பட இருவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

3 நம்பர் லாட்டரி முதலாளி கைது  Two arrested, including a number 3 lottery boss  3 நம்பர் லாட்டரி டிக்கெட்  3 number lottery ticket  3 Number lottery ticket boss arrested in viluppuram  3 Number lottery ticket boss arrested  Tamilnadu Current News  Tamilnadu Crime News  Viluppuram Crime News  Viluppuram District News  விழுப்புரம் மாவட்ட செய்திகள்
3 Number lottery ticket boss arrested
author img

By

Published : Dec 24, 2020, 3:27 PM IST

விழுப்புரம் மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்தில் கடந்த வாரம் மோகன்ராஜ் என்னும் நபர் உள்பட ஐந்து பேர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மோகன்ராஜ் கந்துவட்டிக்கு கடன் வாங்கி ரம்மி, லாட்டரியில் பணத்தை இழந்தது தெரியவந்தது.

தனிப்படை அமைப்பு

இதையடுத்து, மாவட்டம் முழுவதும் காவல்துறைக் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு 3 நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுப்பட்ட 20க்கும் மேற்பட்டோரை தனிப்படைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின், கைது செய்யப்பட்ட அருண் என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், சென்னை, தாம்பரம் பகுதியைச் சேர்ந்த முருகநாதன் என்பவர் முதலாளியாக செயல்பட்டு, தமிழ்நாடு முழுவதும் ஏஜென்டுகளை நியமனம் செய்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

3 நம்பர் லாட்டரி முதலாளி கைது

அதன் அடிப்படையில், தனிப்படைக் காவல் துறையினர் சென்னை விரைந்து சென்று முதலாளி முருகநாதன் (50), மேலாளர் சையத்ஒலி (47) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து நான்கு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், லேப்டாப், ஐந்து செல்போன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றத்தில் ஆஜர்

அப்போது, நீதிபதி பூர்ணிமா 15 நாள் நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டார். முன்னதாக ஐந்து நாள் காவல் துறையின் காவலுக்கு அனுமதிக்க வேண்டும் என காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனால், மூன்று நாள்களுக்கு காவல் துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து, வரும் சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, தனிப்படைக் காவல் துறையினர் இருவரையும் விசாரணைக்காக ரகசியமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

வாரம் ஒரு கோடி லாபம்

தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூன்று நம்பர் லாட்டரி முதலாளி வாரத்திற்கு மூன்று கோடி இலக்கு நிர்ணயித்து லாட்டரி விற்பனை செய்ததும், வாரம் ஒரு கோடி ரூபாய் லாபம் ஈட்டியதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் காவல்துறை உயர் அலுவலர்களிடம் பேசி அவர்கள் இருவரையும் விடுவிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாகவும், ஆனால், காவல் துறையினர் அவர்களை விடுவிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மரக்காணத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.