விழுப்புரம் அருகே சித்தாத்தூர் தென்பெண்ணை ஆற்றில் கடந்த 20 நாட்களாக மாட்டு வண்டிகள், லாரிகள் மூலம் மணல் கடத்தப் படுவதாகத் தொடர்ந்து காவல் துறைக்குத் தகவல் வந்த வண்ணம் இருந்துள்ளது.
இதனையடுத்து, விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறை, இன்று காலை சித்தாத்தூர் தென்பெண்ணை ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்த கண்டமானடி, ஜானகிபுரம், சித்தாத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 22 மாட்டு வண்டிகளைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், மாட்டு வண்டியை ஓட்டி வந்த 22 பேர் மீதும் விழுப்புரம் வட்டார காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இணைய வழி மோசடி - ரூ.1 லட்சத்தை இழந்த சார்பு ஆய்வாளர்