வேலூர்: மேல்பட்டி அடுத்த கார்கூரை சேர்ந்தவர் வடிவேல். இவர் பெங்களூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு ரயில் மூலம் செல்ல ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு நேற்று மாலை வந்துள்ளார். அப்போது ரயில் நிலையத்திலிருந்து ரயில் கிளம்பிய நிலையில் வடிவேல் ஓடிச்சென்று ரயிலில் ஏற முயன்ற போது எதிர்பாரா விதமாக ரயில் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த நிலையில் வடிவேலின் இரண்டு கால்களும் ரயிலில் சிக்கி துண்டானது.
உடனடியாக அவரை மீட்ட சக பயணிகள் வடிவேலை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இந்நிகழ்வு குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சினிமாவில் நடிக்க ஆசை: மனைவியை கொலை செய்த கணவன்?