ETV Bharat / state

பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டி... கொலை செய்த பேரன் - பாட்டியை கொலை செய்த பேரன்

வேலூர்: பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை கொலை செய்த பேரனை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

young man murdered his grandmother for not calling for biriyani in vellore

author img

By

Published : Dec 11, 2020, 5:53 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி (60). இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.நேற்று (டிச. 10) ராஜேஸ்வரி வீட்டில் பிரியாணி சமைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு ராஜேஸ்வரியின் பேரன் ராகேஷ் ( 20) குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்பொழுது அங்கு ராஜேஸ்வரியின் மகள் வழி பேரன் மற்றும் பேத்திகள் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் "என்னை ஏன் பிரியாணி சாப்பிட அழைக்கவில்லை " என கூறி அவரது தாத்தா கண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

வாக்குவாதம் முற்றவே அவர்களிடம் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி இருவரையும் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராகேஷ் தனது பாட்டி ராஜேஸ்வரியை கைகளால் தாக்கியும் அருகில் இருந்த சாலையில் பிடித்து தள்ளியும் விட்டுள்ளார்.

இதில் காயமடைந்த ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள் ராகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவி பிரிந்து சென்றதற்காக கொலை: ஒருவர் சரண், 4 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.