வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்பபுரம் ரயில்வே தண்டவாளத்தில் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற விரைவு ரயில் முன் பாய்ந்து இருவர் தற்கொலை செய்துகொண்டதாக ரயில் ஓட்டுநர் காட்பாடி ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே காவல் துறையினர் அடையாளம் தெரியாத நிலையில் உயிரிழந்து கிடந்த இளம்பெண் - இளைஞரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
உயிரிழந்தவர்கள் 25 முதல் 30 வயதுக்குள் இருக்கலாம் என்றும் அவர்களது செல்ஃபோன்களை ஆய்வு செய்ததில் அனைத்து நம்பர்களும் அழிக்கப்பட்டுவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் காதல் ஜோடியினரா? அல்லது கணவன் மனைவியா? என்றும் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.