அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு எதிரில் கர்ப்பிணிகள், பிற நோயாளிகளை பார்க்கவரும் உறவினர்கள் காத்திருப்பது வழக்கம்.
இங்கு 40 வயதான பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது அவரை இளைஞர் ஒருவர் சுற்றிசுற்றி வந்தார்.
இந்நிலையில் அவரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், காலில் கிடந்த செருப்பை கழட்டி சில்மிஷ இளைஞரை பளார் பளார் என்று ஒங்கி அறைவிட்டார்.
இதில் அலறித்துடித்த அந்த இளைஞரை, அப்படியே அள்ளி காவலர்களிடம் ஒப்படைத்துவிட்டார். இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கண்ணமங்கலத்தை அடுத்த கம்பம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் (32) என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க...குற்றம் 03: உங்கள் அடையாளமும் திருடப்படலாம்!