ETV Bharat / state

திருவள்ளூர் 'வைரல் ஆசிரியர்' மீது பெண் போலி புகார்? - திருவள்ளூர்

திருவள்ளூர்: திருவள்ளூரைச் சேர்ந்த ஆசிரியர் பகவான் மீது, அவரது உறவுக்கார பெண் போலிப் புகார் அளித்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆசிரியர் பகவான்
author img

By

Published : May 11, 2019, 6:59 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கோவிந்த் பகவான் (32). கடந்தாண்டு பகவான் பணியிட மாற்றம் செய்யப்பட்டபோது, மாணவ, மாணவிகள் ஆசிரியர் பகவானை அங்கிருந்து செல்லக்கூடாது என்று தடுத்து, கட்டிப்பிடித்து அழுதனர். இக்காட்சி சமூகவலைத் தளங்களில் வைரல் ஆனதைத் தொடர்ந்து பகவான் அனைவரது கவனத்தையும் பெற்றார். அதைத் தொடர்ந்து, அவருக்கான பணியிட மாறுதல் உத்தரவும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆசிரியர் பகவான் வசிக்கும் பொம்மராஜுபேட்டையில் உள்ள அவரது மாமா முறை உறவினர் நாதமுனியின் மகள் கவிதா என்ற பெண், தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி பகவான் தன்னை ஏமாற்றி விட்டு தற்போது வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய உள்ளதாக திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருத்தார்.

இதைத் தொடர்ந்து காவல் துறையினர் ஆசிரியர் பகவானிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்யுமாறு தன் பெற்றோர் கூறியதற்கு மறுப்பு தெரிவித்தேன். இதையடுத்து, தற்போது எனக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், என் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இந்த பொய்ப் புகாரை அளித்துள்ளனர்.

இந்த புகாரின் மீதான விசாரணையில் மருத்துவப் பரிசோதனைக்கும் தான் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அப்பெண் பரிசோதனைக்கு கால அவகாசம் கோரியதையடுத்து, அவருக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்து காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். எனவே,மாணவர்களின் மனதில் இடம்பிடித்த ஆசிரியர் பகவான் மீது அப்பெண் போலிப் புகார் அளித்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Intro:திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு அருகே அரசு பள்ளி ஆசிரியர் பகவான் மீது உறவுக்கார பெண் புகார். திருமணம் செய்வதாக கூறி வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆனதால் புகார் அளித்துள்ளார். இருதரப்பினரையும் விசாரித்த காவல்துறையினர் குடும்ப முக்கியஸ்தர்கள் பேசி சுமூக தீர்வு காணப்போவதாக காவல் நிலையத்தில் எழுதி கொடுத்ததால் தற்காலிக தீர்வு.

Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு வெளியகரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி. 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 260 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் ஆங்கில பாடத்திற்கு ஆசிரியராக பகவான் உள்ளிட்ட 4 பேர் உள்ளனர். இதில் பகவான் என்ற ஆங்கில ஆசிரியரை பணி இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியின் முன் வாசலுக்கு பூட்டு போட்டு பள்ளி முன்பு பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்து மாணவர்களும் ஆசிரியர் பகவானின் காலைப் பிடித்துக் கொண்டு இங்கிருந்து நீங்கள் மாறுதலாகி செல்லக்கூடாது, நீங்கள் பாடம் நடத்தினால் நாங்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவோம் என்று சொல்லிக்கொண்டே கதறி அழுதுள்ளனர். இதனை அடுத்து பணிமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டு மீண்டும் வெளியகரம் பள்ளியிலேயே ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பகவான் வசிக்கும் பொம்மராஜுபேட்டையில் உறவினரான நாதமுனி என்கிற மாமாவும் வசித்து வருகிறார். இவரது மகள் கவிதா பகவானை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆசிரியர் பகவான் திருமணம் செய்ய பெற்றோர்கள் சம்மதித்ததால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி உள்ளார். இதையடுத்து சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நிச்சயதார்த்தமும் நடந்து உள்ளது. வருகின்ற 19ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள இந்நிலையில் இன்று கவிதா திருத்தணி காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்வதாக கூறி அவர் மறுத்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இறுதியாக இரு வீட்டிலும் பெரியவர்கள் பேசி உரிய தீர்வு காண்கிறோம் என்று சமாதானமாக எழுதிக் கொடுத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாகவே காணப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.