ETV Bharat / state

குழந்தையை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுத்த ஆந்திரப் பெண் - கையும் களவுமாக பிடித்த வேலூர் ஆட்சியர் - District Collector Shanmugasundam

வேலூர்: குழந்தையை வாடகைக்கு எடுத்து பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த ஆந்திரப் பெண்ணை மாவட்ட ஆட்சியர் கையும் களவுமாக பிடித்து கைது செய்ய உத்தரவிட்டார்.

woman
woman
author img

By

Published : Jan 9, 2020, 10:23 PM IST

வேலூர் மாவட்டம், காட்பாடியில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாராத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தொடக்கி வைத்தார்.

அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் குழந்தையை வைத்து ஒரு பெண் பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததை கவனித்த ஆட்சியர், அந்தப் பெண்ணை மடக்கிப்பிடித்து விசாரணை செய்தபோது, அந்தக் குழந்தை அந்த பெண்ணுடையது அல்ல என்பது தெரிய வந்தது.

மேலும் அந்தப் பெண் ஆந்திர மாநிலம், புத்தூரைச் சேர்ந்த மல்லேஸ்வரி என்றும், அவர் குழந்தையை வாடகைக்கு எடுத்துவந்து இதுபோன்று பிச்சை எடுப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைதுசெய்ய காவல் துறைக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

பின்னர் காவல் துறை, சமூக நலத்துறையின் மூலம் அப்பெண் கைதுசெய்யப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். ஆந்திராவிலிருந்து சில நபர்கள் வாடகைக்கு குழந்தையை எடுத்து வந்து பிச்சை எடுப்பது இன்று வரை தொடர்ந்து வருவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குழந்தையை வைத்து பிச்சை எடுத்த ஆந்திரப் பெண் கைது

பெரும்பாலும் அரசு நிகழ்ச்சிகள் என்றால் நிகழ்ச்சியில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு காரில் ஏறி செல்லும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்தியில், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனித்து, அதன் மூலம் ஒரு குழந்தையின் எதிர்காலத்தைக் காப்பாற்றிய மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தின் இந்தச் செயல்பாடு அனைவரின் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: தந்தைக்கு மது வாங்கிக் கொடுத்து கடத்தப்பட்ட குழந்தை - அதிரடியாக மீட்பு

Intro:வேலூர் மாவட்டம்

வேலூரில் குழந்தையை வாடகைக்கு எடுத்து பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த ஆந்திரப் பெண் மாவட்ட ஆட்சியர் கையும் களவுமாக பிடித்து கைது செய்ய உத்தரவுBody:வேலூர் மாவட்டம், காட்பாடியில் இன்று குழந்தைகள் வன் கொடுமை தடுப்பு மற்றும் குழந்தைகள் பாலியல் வன் கொடுமைக்கு எதிராகவும் மாராத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் துவங்கி வைத்தார். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் குழந்தையை வைத்து ஒரு பெண் பிச்சை எடுத்துகொண்டிருந்தா. இதை கவனித்த மாவட்ட ஆட்சியர் அந்த பெண்ணை மடக்கி பிடித்து விசாரணை செய்த போது திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதாவது அந்த குழந்தை அந்த பெண்ணுடையது அல்ல. அந்த பெண் ஆந்திர மாநிலம் புத்துரை சேர்ந்த மல்லேஸ்வரி என்றும் வாடகைக்கு குழந்தையை எடுத்து வந்து இதுபோன்று பிச்சை எடுப்பதும் தெரியவந்த்து. இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார். பின்னர் காவல்துறை மற்றும் சமூக நலத்துறையின் மூலம் அப்பெண் கைது செய்யப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார் ஆந்திராவிலிருந்து வாடகைகளுக்கு குழந்தையை எடுத்து வந்து ஒரு கும்பல் தினந்தோறும் பிச்சை எடுத்து வரும் நிலையில் இன்று ஒரு குழந்தையை வாடகைக்கு எடுத்து வந்து பிச்சை எடுத்த ஆந்திராவை சேர்ந்த பெண்ணை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெரும்பாலும் அரசு நிகழ்ச்சிகள் என்றால் நிகழ்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தி விட்டு சொகுசாக காரில் ஏறி செல்லும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்தியில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனித்து அதன் மூலம் ஒரு குழந்தையின் எதிர்காலத்தை காப்பாற்றிய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தின் இந்த செயல்பாடு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.